சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம், சென்னை மெட்ரோ இரயில் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பேருந்து வசதி பயணிகளுக்கு தடையின்றி கிடைப்பது, ஒருங்கிணைந்த வகையில் மக்களுக்கு போக்குவரத்து வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பேருந்து நிலையத்தை மாற்றும்போது பேருந்து வசதிகளை எவ்வாறு அளிப்பது? என்பது குறித்து ஆலோசனை அளிக்க நிறுவனத்தை தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றவும், சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/koyambedu-bus-stand-to-be-relocated-what-are-the-arrangements.html