ஞாயிறு, 31 ஜூலை, 2022

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 30 7 2022 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,548 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று 1,624 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது.


நேற்று வரை மொத்தம் 13,510 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 1,964 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இன்றைய நிலவரப்படி 13,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 345 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அடுத்தபடியாக செங்கல்பட்டில் 158 பேர், கோவையில் 155 பேர், சேலத்தில் 65 பேர் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டனர்.

இத்தகவல் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. எனினும், தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் இருப்போர், ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/todays-corona-affected-list.html