உலகளாவிய சந்தை நிலவரம், அமெரிக்க வங்கிகளின் வட்டி வீதம் உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப சரிவு என பல்வேறு காரணிகளால் தங்கம் விலை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சற்று சரிந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (ஜுலை 19) தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்து ரூ.4, 658ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37, 264 ஆக உள்ளது.
24 காரட் தூய தங்கம் கிராம் ரூ.5060 என விலை நிர்ணயிக்கப்பட்டு ரூ.40480 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து கிலோ ரூ.60,700 ஆக உள்ளது. நேற்று கிராம் வெள்ளி ரூ.61.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.61,700 ஆக விற்கப்பட்டுவந்தது.
தங்கத்தை பொருத்தவரை உள்ளுர் வரி, போக்குவரத்து செலவினங்கள், மாநில வரிகள் விதிக்கப்படுவதால் மாநிலத்துக்கு மாநிலம் விற்பனை விலை மாறுபடும்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையான லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் மாற்றமின்றி ரூ.94.24 ஆக விற்பனையாகிறது.
source https://tamil.indianexpress.com/business/today-gold-and-silver-rate-in-chennai-19th-july-481393/