திங்கள், 25 ஜூலை, 2022

கூகுள் மீட் வழியாக யூடியூபில் லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம்!

 

கூகுள் மீட் பயனர்களால் இனி, யூடியூபில் லைவ்ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது மீட் பயன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்து அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மை யூடியூப்பில் லைவ்ஸ்ட்ரீம் செய்யப் பயனர்களை அனுமதிக்கிறது. அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, கூட்டத்தின் செயல்பாடுகளைக் குழுவிற்குச் சென்று “லைவ் ஸ்ட்ரீமிங்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும் எனவும், நிர்வாகி இதனை இயக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் நடத்தும் கூட்டத்தை ஸ்ட்ரீமிங் செய்யத் தங்கள் சேனலைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பயனர்கள் தங்கள் நிறுவனத்திற்கு வெளியே உள்ள பெரிய பார்வையாளர்களுக்குத் தகவல்களை வழங்க விரும்பும் சூழ்நிலைகளில் லைவ் ஸ்ட்ரீமிங் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூகுள் விளக்கமளித்துள்ளது.

YouTube-ல் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கான சேனல் ஒப்புதல் செயல்முறை உள்ளதால், Google Meet மூலம் பயனர்கள் தங்கள் சேனல் லைவ்ஸ்ட்ரீம் செய்ய அனுமதியை YouTube-ல் பெற்றிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் எனவும், தெரிவித்துள்ளது.

ஒரு சந்திப்பை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது போன்ற அம்சம், கூகுள் மற்ற தளங்களிலிருந்து Meetடைப் பிரித்தெடுக்கும் மற்றொரு வழி போல் தெரிவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, புதிய அம்சம் படிப்படியாக வெளியிடப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தகட்ட வெளியீடு ஜூலை 25 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை விரைவில் நடைமுறைக்கு வரும்போது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


source https://news7tamil.live/google-meet-allows-users-to-livestream-meetings-on-youtube.html