புதன், 27 ஜூலை, 2022

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!

 


ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இரும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தமிழர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறை, தொழில் முறை போன்ற பல அரிய விஷயங்கள் புலப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த தொல்லியல் அகழாய்வு பணியின் போது மிக நீளமான மற்றும் அகலமாக குழியில் 160 செண்டிமீட்டர் நீளமுள்ள இரும்பால் செய்யப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே குழியில் இந்தியாவில் அகழாய்வு பணியில் முதல் முறையாக இரும்பால் செய்யப்பட்ட பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரும்பு பாத்திரத்தில் நெல்உமிகள் ஒட்டிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் அகழாய்வு பணியில் இதுவரை 90 முதுமுக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/rare-items-discovered-in-adichanallur-excavations.html