தமிழக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற விவரங்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து மாவட்டங்களின் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்ற வழக்கு ஒன்றில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல செய்யப்படுகின்றன. இதை தவிர்க்க, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த தேதி, நேரம் ஆகியவற்றை நீதிமன்ற ஊழியர்கள் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16க்கு அவர் தள்ளி வைத்தார்.
முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள் நிலுவை வழக்குகள் நீதிமன்றங்களுக்கு முன் இருக்கும் மிகப் பெரிய சவால் என்று தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற விவரங்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து மாவட்டங்களின் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/how-many-cases-are-pending-chennai-high-court-question.html