19 7 2022
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக சரிந்துள்ளது. இது இறக்குமதி மட்டுமின்றி ஏற்றுமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்றைய தினத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.06 ஆக சரிந்துள்ளது. இந்த டாலர் வழியாகத்தான் இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்துவருகிறது.
ஆகையால் இந்திய ரூபாய் மதிப்பு சரியும்போது, வெளிநாடுகளில் இருந்து ஒரு பொருளை வாங்க, நாம் அதிக விலை கொடுக்க வேண்டும். அதேநேரம் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போதும், பண மதிப்பு வீpழ்ச்சி காரணமாக நமக்கு போதிய விலை கிடைக்காது. மேலும் நமது போட்டியாளர்களையும் இது அதிகப்படுத்தும். நமது பொருள்கள் மலிவாக கிடைக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது
எளிமையாக சொல்லப் போனால் சந்தைகளில் ரூபாயின் மதிப்பு வலுவிழந்து காணப்படுகிறது. டாலரின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு இரண்டு பொதுவான காரணிகள் உள்ளன. ஒன்று ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பது.
இதுவே நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இது ஒரு நாட்டில் காணப்பட்டால் டாலரின் தேவை அதிகரிக்கும். இதற்கிடையில் நடப்பாண்டில் உக்ரைனும் ரஷ்யாவும் போரில் மோதிக்கொண்டன. இதனால் கச்சா உள்ளிட்ட பொருள்களின் விலை படிப்படியாக உயர்ந்தது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா அதிக டாலர்களை செலவிடுகிறது. இதனால் நாட்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. மறுபுறம் அமெரிக்க வங்கிகள் வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கி நகர்கின்றன.
எனினும் அமெரிக்காவிலும் பணவீக்கம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் டாலரில் முதலீடு அதிகரித்து பணத்தில் முதலீடு குறைகிறது. இந்த இரண்டு காரணிகளால் அமெரிக்க டாலர் வலுப்பெற்றும், இந்தியப் பணத்தின் மதிப்பு சரிந்தும் காணப்படுகிறது.
ரூபாய் மதிப்பு மட்டும் குறைகிறதா?
இல்லை. ஐரோப்பிய யூரோ மற்றும் யென் உள்ளிட்ட நாணய மதிப்புகளுக்கு எதிராகவும் அமெரிக்க டாலர் வலுப்பெற்றுவருகிறது. இதேபோன்று பல நாட்டு நாணய மதிப்புகளுக்கு எதிராகவும் டாலர் வலுப்பெற்றுவருகிறது.
அப்படியென்றால் இந்திய ரூபாய் பாதுகாப்பானதா? என்ற கேள்வியெழும். இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கை அறிந்துகொள்வது அவசியம். பரிவர்த்தனை விவகாரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்திய ரூபாய் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கும். ஆனால் ரூபாய் விகிதத்தில் வீழ்ச்சியை குறைக்கவும், எழுச்சியை சீராக்கவும் சில கட்டுப்பாட்டை விதிக்கிறது.
மேலும் சந்தையில் டாலர்களை பயன்படுத்துகிறது. இது வீழ்ச்சியை மென்மையாக்கிறது. அதேநேரம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
இருப்பினும் தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வரும் நாள்களில் ரூ.82 ஆக கூட சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/explained/rupee-falls-to-dollar-why-is-it-happening-explained-481664/