சனி, 30 ஜூலை, 2022

புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை

 கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அட்டை படத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருப்பதுபோல உள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரனிடம் கேட்டபோது ,” புத்தகத்தில் உள்ள உள்ளடகத்தை பாருங்கள். அதை தவிர்த்து கவிஞரின் உடையை பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvalluvar-saffron-dress-in-book-makes-controvery-in-coimbatore-486261/