சனி, 23 ஜூலை, 2022

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: முன்னணியில் எந்த மாநிலங்கள்?

 22 7 2022

பட்டியலின சாதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரியவந்துள்ளது.

தெலுங்கான எம்பிக்கள் கோமதி ரெட்டி, வெங்கட் ரெட்டி, மான்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு பட்டியலின சாதிகளுக்கு எதிராக 42,793 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே 2020ஆம் ஆண்டு 50,000 ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் 2018ம் ஆண்டு  6,528 ஆக இருந்தது. இதுவே 2020ம் ஆண்டு  8,272 அதிகரித்துள்ளது.

பட்டியலின சாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலத்தில் அதிகமாக நிகழ்ந்துள்ளது. 2018ம் ஆண்டில் உ.பி-யில் 11,924 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.  இதுவே 2020-ல் 12,714 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுபோல பிகாரில் 2018ம் ஆண்டில் 7,061 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது 2020ம் ஆண்டில் 7,368 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல பழங்குடியினர் எதிராக நடைபெற்ற குற்றங்கள் மத்திய பிரதேசம்  மற்றும் ராஜஸ்தானில்தான் அதிகமாக நிகழ்கிறது. மத்திய பிரதேசத்தில் 2018ல் 1,868 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவே 2020-ல் 2,401 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 2018-ல் 1,095 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவே 2020-ல் 1,878 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.   


source https://tamil.indianexpress.com/tamilnadu/crimes-against-scs-sts-rise-in-cases-and-trends-by-state-483100/