புதன், 27 ஜூலை, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்

 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடு இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் மாணவி மரணம் தொடர்பாக உயிரிழந்த பெற்றோர் மற்றும் பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்து வருகின்றனர். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான மரணம் தொடர்பாக இன்று விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளனர். இதற்காக ஜூலை 26 முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதில் இரண்டாவது நாளான இன்று 27ஆம் தேதி உயிரிழந்த மாணவி தங்கிய பள்ளி விடுதி மற்றும் பெற்றோரைச் சந்திக்கின்றனர்.

இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங் கானூங்கோ உடன் ஆணையத்தின் இரண்டு ஆலோசகர்கள் வருகின்றனர். இவர்களுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் வந்துள்ளனர். இன்று கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ கடலூர் மாவட்டம், வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தனர். இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு விசாரணைக்காக செல்கின்றனர்.

வேப்பூரில் உள்ள உயிரிழந்த மாணவி வீட்டில் விசாரணை செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ கூறியதாவது: “பெற்றோருடன் பேசினோம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை செய்ய உள்ளோம். மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் விசாரணை செய்ய உள்ளோம். மேலும், ஆரம்பத்தில் இருந்து இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், விசாரணை அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரை சந்தித்து விசாரணை செய்த பிறகு முழு அறிக்கையை சமர்பிப்போம்,” என்று  தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா


source https://news7tamil.live/kallakurichi-student-death-investigation-flawed-national-commission-for-protection-of-child-rights-chairman.html