புதன், 27 ஜூலை, 2022

பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு

 

இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையின்படி பசு, எருது மற்றும் கன்று இறைச்சிகள் தடை செய்யப்பட்டவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

2021-22 ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியின் மொத்த அளவு என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில இந்தியாவின் தரவரிசை எண் என்ன? மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளாதா? என மக்களவையில் உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்ரியா பட்டேல், இந்திய ஏற்றுமதி கொள்கையின் படி பசு, கன்று, எருது உள்ளிட்ட இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்வதற்கு எந்த அனுமதியும் இல்லை என எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/cow-ox-meat-banned-central-govt.html