செவ்வாய், 26 ஜூலை, 2022

வங்கிகள் தேசியமயமாக்கல்: தவறா? சாதனையா?

 

Bank nationalisation
தேசியமயமாக்கல் காரணமாக வங்கிகள் என்ன சாதித்தன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளுடன் ஒப்பிட்டும் பார்க்கப்படுகிறது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 53ஆவது ஆண்டு தினம் கடந்த வாரம் (ஜூலை 19ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. அப்போது, ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க நினைக்கிறார்.

இதனைக் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் எனக் அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். முன்னதாக பொதுத்துறை வங்கிகளை தேசியமயமாக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்தாண்டு பட்ஜெட் அமர்விலேயே அறிவித்திருந்தார்.

அப்போது ஐடிபிஐ வங்கி தவிர இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து பேசினார். இந்த நிலையில் வங்கிககளை தேசியமயமாக்குவது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களையும், ஆதரவுகளையும் பெற்றுவருகிறது.

இந்திராவின் வங்கி தேசியமயமாக்கல் நடவடிக்கையை சிலர் துல்லியமான சாதனை என வர்ணிக்கின்றனர். மற்ற சிலரோ இது தவறான கொள்கை முடிவு என விமர்சிக்கின்றனர்.

அற்புதமான நடவடிக்கை
காங்கிரஸ் அரசாங்கம் 1969ஆம் ஆண்டு 14 வங்கிகளையும், 1980ஆம் ஆண்டு 6 வங்கிகளையும் நாட்டுடைமையாக்கியது. இதனால் தனியார் வசம் இருந்த இந்த வங்கிகள் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
இந்த வங்கிகள் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தின. விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. ஏனெனில் அந்நேரத்தில் இந்தியா விவசாய பொருளாதாரமாக இருந்தது. மேலும் நாட்டில் வறுமையும் 50 விழுக்காடுக்கு மேல் காணப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த 2014ஆம் ஆண்டு ஆக்ஸிஸ் வங்கி தலைவரும் தலைமை செயல் அலுவலருமான பி ஜே நாயக் தலைமையில் நாயக் கமிட்டி ஒன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் உருவாக்கப்பட்டது.
இந்தக் குழு, ‘பொதுத்துறை வங்கிகளின் நிதி பலவீனமாக உள்ளது. மேலும் இயக்குனர்கள் தேர்வில் சமரசம் காணப்படுகிறது. அதன் விளைவாக நிர்வாகம் பலவீனமாக உள்ளது எனத் தெரிவித்தது.

மேலும் தனியார் வங்கிகளுடன் போட்டிப் போடும் நிலையில் இல்லை என்பதாகும். என்பிஏ (NPA) என்னும் செயல்படாத சொத்துகளின் மதிப்பும் அதிகரித்து காணப்பட்டது. இதனை தீவிர நடவடிக்கை மூலம் சரிசெய்யும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.
இதில் சீர்திருத்தம் செய்யப்படாவிட்டால் வங்கியின் பொருளாதாரத்தில் மாற்றம் வராது. இந்தப் போதிய சீர்திருத்ததுக்கு அதிகளவு நிதி தேவைப்படும். ஆனால் துரதிருஷ்டவசமாக செயல்படாத சொத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகாணப்படுகிறது. இதனால் மத்திய அரசு மறுமூலதன முதலீடு அளிக்கிறது.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் ரூ.2.79 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட வேண்டியிருந்தது. இது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்ட பத்திரங்களை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.
மேலும் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு விகிதம் வரி செலுத்துவோரால் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் ரூ.71 பைசா மதிப்பை பெறுகிறது.

மேலும் பொருளாதார ஆய்வறிக்கையில் பொதுத்துறை வங்கிகள் மோசமாக செயல்படும் தனியார் துறை வங்கிக்கு சமமாக மாறினாலும் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது சுருக்கமாக சொல்லப் போனால் வங்கிகள் செயல்திறன் மற்றும் லாப அளவீடுகளில் தனியார் வங்கிகளை விட மிகவும் பின்தங்கியுள்ளன.
ஆகையால், நீண்ட காலம் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கியது போல் வங்கிகளையும் ஏன் தனியார்மயமாக்கக் கூடாது என்ற கேள்விகள் எழுகின்றன.

வங்கி தேசியமயமாக்கல் ஓரு தவறு
தேசியமயமாக்கல் காரணமாக வங்கிகள் என்ன சாதித்தன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளுடன் ஒப்பிட்டும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளின் மூலோபாய திட்டங்களும் குறைந்து காணப்படுகின்றன. மறுபுறம் மத்திய அரசின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு (ஜன்தன்) திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் 27.35 கோடி ரூபே கார்டுகளும், பிராந்திய வங்கிகள் 3.40 கோடி ரூபே கார்டுகளும், தனியார் வங்கிகள் 1.10 கோடி ரூபே கார்டுகளும் வழங்கியுள்ளன.

அதாவது மொத்தமுள்ள 46 கோடி கார்டுகளில் 1.3 கணக்குகள் மட்டுமே தனியார் வங்கிகளில் உள்ளன. இதேபோல் மற்ற திட்டங்களிலும் இந்த வங்கிகள் திறமையாக செயல்பட வேண்டும்.
இல்லாவிட்டால் வருமான வரி வீணாகிறது என்ற குற்றச்சாட்டை சுமக்க நேரிடும். ஆனால் உண்மையில் வருமான வரி வீணடித்தலை பொதுத்துறை வங்கிகளா செய்கிறது என்றால் ஒரு பெரிய கேள்விவரும்.

ஏனெனில் வருமான வரி வீணடித்தலுக்கு அரசின் தவறான திட்டங்களும், கொள்கை முடிவுகளுமே காரணம். இந்த விவகாரத்தில் அரசின் பொதுத்துறை வங்கிகள் பூதாகரமாக அரக்கத்தனமாக காட்டப்படுகின்றன.
எனினும் இந்தாண்டு கடந்த கால தேசியமயமாக்கல் தவறு? வரவிருக்கும் தேசியவாததே சரி என்பன போன்ற விவாதங்கள் எழும். இதற்கிடையில் அடுத்த வாரம் அமெரிக்க வங்கிகள் வட்டி வீதத்தை உயர்த்துகின்றன.

இது இந்திய பண மதிப்பு, பங்குச் சந்தை, அந்நிய செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தாக்கம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

source https://tamil.indianexpress.com/explained/bank-nationalisation-is-a-blunder-or-masterstroke-484499/