ஞாயிறு, 10 ஜூலை, 2022

ட்விட்டரில் சர்ச்சை பதிவு: சவுதா மணி கைது

 மத கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சை கருத்து பதிவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்களை பதிவிடும் நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும் இந்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் சவுதாமணி, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறது. இதில் சமீபத்தில் அவர் தனது டவிட்டர் பக்கத்தில், மத கலவரத்தை தூண்டுவம் வகையில் கருத்துக்களை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கருத்தை பதிவிட்ட அவருக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அடுத்து அவர் மதகலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை சென்னை சூலைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு சவுதாமணி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சவுதாமணியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-executive-sowdhamani-arrested-for-inciting-violence-post-on-twitter-477237/


Related Posts: