ஞாயிறு, 9 அக்டோபர், 2022

ஆளுனர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் அனுப்பிய கோவை வாலிபர் சங்கம்: படித்துவிட்டு கருத்து சொல்ல கோரிக்கை

 8 10 2022

ஆளுனர் ஆர்.என் ரவிக்கு திருக்குறள் அனுப்பிய கோவை வாலிபர் சங்கம்: படித்துவிட்டு கருத்து சொல்ல கோரிக்கை

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திருக்குறளை முழுமையாக படித்துவிட்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அஞ்சல் மூலம் திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும்.

திருக்குறள் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து பேசும்நிலையில் அரசியலுக்காக இதனை வெறும் வாழ்கை நெறிமுறை புதக்கமாக கூறி வருகின்றனர் ’’ என பேசினார்.  இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆளுநருக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முழுமையாக திருக்குறளை படிக்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்துச் சென்று திருக்குறள் புத்தகங்களை அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர். ஆளுநர் முழுமையாக திருக்குறளை படித்துவிட்டு கருத்துகளை பேச வேண்டும் என தெரிவித்தனர்.

பி.ரஹ்மான் கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/indian-democratic-youth-association-sent-thirukkural-book-to-governor/