ஹரியானா அரசு சமீபத்தில் அதன் கலால் சட்டத்தில் திருத்தை மேற்கொண்டு மதுபானம் வாங்க மற்றும் விற்பனை செய்யும் வயதை 25 வயதில் இருந்து 21 வயதாக குறைத்து அறிவித்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரின் நிறைவு நாளான புதன்கிழமை (டிசம்பர் 22) சட்டமன்றத்தில் வயது வரம்பை மாற்றுவது தொடர்பான திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பல மாநிலங்கள் குறைந்த வயது வரம்புகளை கொண்டுள்ளதால் அரசும் இந்த வயது வயது வரம்பை குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக அளவில் குடிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு என்ன என்பதை நாம் இந்த செய்திக்குறிப்பில் காண உள்ளோம்.
தி இன்டர்நேஷனல் அலையன்ஸ் ஃபார் ரெஸ்பான்ஸிபிள் ட்ரிங்கிங் 2020ம் ஆண்டு உலக நாடுகளில் பின்பற்றப்படும் வயது வரம்பை பட்டியலிட்டது.
ஆப்கானிஸ்தான் : மது வாங்க, விற்க, குடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா : மது அருந்துவதற்கான விதி அதிகார வரம்புகள் முழுவதும் மாறுபடும் அதே வேளையில், 18 வயது நிரம்பியவர்கள் ஆன்-பிரிம்ஸ் மற்றும் ஆஃப்-பிரைம்ஸ் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் சிறார்களும் பெரியவர்களும் உடன் வரும்போது விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளது.
வங்கதேசம் : போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதியை பெற்றிருந்தால் தவிர கட்டிடங்களில் / பொதுவெளியில் ஒரு நபர் அனைத்து வயதினருக்கும் மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அனுமதியை பெற இயலும்.
கனடா : மனிடோபா மற்றும் நியூ பிரன்சுவிக் மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் சஸ்காட்செவன் ஆகிய இடங்களில் உள்ள உரிமம் பெற்ற வளாகங்களில் வயது வந்தோர் மேற்பார்வையின் கீழ் சிறார்களால் மது அருந்துவது அனுமதிக்கப்படுகிறது என்று ஐ.ஏ.ஆர்.டி. தெரிவிக்கிறது.
எகிப்து : 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆன் மற்றும் ஆஃப் ப்ரிமிஸ்களில் மதுபானம் விற்க தடையில்லை.
ஜெர்மனி : பீர் மற்றும் ஒயினுக்கு 16 வயது (பெற்றோர் அல்லது வயது வந்தோர் உடன் இருந்தால் 14 வயதினருக்கு), ஸ்பிரிட் வகைக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18. 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்கள், இரவு விடுதிகள் மற்றும் அதுபோன்ற பொழுதுபோக்கு இடங்களாக உரிமம் பெற்ற வளாகங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியா : கோவா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, சிக்கிம் மற்றும் புதுவையில் மது வாங்க குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒரிசா , ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 21 வயது. ஹரியானா, மேகாலயா, பஞ்சாப், டெல்லியில் 25 வயது.
பிகார், குஜராத், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் / யூ.டியி. மதுவிற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
ஈரான், குவைத், லிபியா,சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மது வாங்க, விற்க மற்றும் குடிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியா : இஸ்லாமியர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் அல்லாதோருக்கு மது அருந்த குறைந்தபட்ச வயதாக 21 அறிவிப்பு.
இலங்கை: 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வளாகத்தின் உள் மற்றும் பொதுவெளியில் மது விற்பனை அனுமதிக்கப்படுகிறது.
அமீரகம் : ஷார்ஜாவில் மது வாங்க, விற்க மற்றும் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் வரம்பு 21.
அமெரிக்காவில் குடிப்பதற்கான குறைந்தபட்ச சட்ட வயது (எம்எல்டிஏ) 21 ஆண்டுகள். 1984ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு முன்பு வெவ்வேறு மாகாணங்களில் வெவ்வேறு வயது வரம்பு இருந்தது.
இங்கிலாந்து : ஒரு நபர் பொது இடங்களில் குடித்திருந்தால், 18 வயதிற்கு குறைவாக இருந்தால் அவர்கள் நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட சட்டம் வழிவகை செய்கிறது. வயது வந்தவருடன் அமர்ந்து 16 (அ) 17 வயது நபர்கள் உணவு அருந்தும் போது வைன், பீர், அல்லது சிட்டர் குடிக்க அனுமதி உண்டு. ஆனால் வாங்குவதற்கு அனுமதி இல்லை. 18 வயதிற்குட்பட்டவருக்கு மது வாங்கி தருவது அல்லது அவரை வாங்க வைப்பது, மற்றும் உரிமம் பெற்ற இடங்களில் குடிக்க வைப்பது போன்றவை சட்டத்திற்கு எதிரானது.
source https://tamil.indianexpress.com/explained/the-minimum-legal-drinking-age-in-some-countries-across-the-world-387551/