24 12 2021
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவை கணிசமாக அதிகரிக்க முடிந்தது என்று கண்டறிந்துள்ளது. தடுப்பூசி’ வேகமாக பரவும் மாறுபாட்டிற்கு எதிராக சில பாதுகாப்பை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு (Covishield) மற்றும் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட வக்ஸ்வேரியா (Vaxzevria) என்ற பிராண்ட் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்படும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது. தற்போதைய ஆய்வை அதே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது.
தடுப்பூசி கண்டுபிடிப்புகள்
மூன்றாவது டோஸைப் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட செரா (sera- இரத்தம் உறைந்த பிறகு எஞ்சியிருக்கும் மெல்லிய திரவம்) இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு டெல்டா மாறுபாட்டிற்கு எதிராகக் காணப்பட்ட அளவுகளுடன் ஒப்பிடும்போது, ஒமிக்ரான் மாறுபாட்டை நடுநிலையாக்க முடிந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும், மூன்றாவது டோஸுக்குப் பிறகு நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகளின் அளவுகள், டெல்டா உள்ளிட்ட பிற வகைகளால் இதற்கு முன்பு பாதிக்கப்பட்டு, தாங்களாகவே குணமடைந்த நபர்களிடம் காணப்பட்டதை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்டுப்படுத்தல்?
Moderna அல்லது Pfizer போன்ற பிற தடுப்பூசிகள் மீதான ஆய்வுகள்’ அவற்றின் மூன்றாவது டோஸ்கள் ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதாக பரிந்துரைத்துள்ளன. இருப்பினும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான அவற்றின் செயலுடன் ஒப்பிடும்போது குறைந்த செயல்திறன் கொண்டது.
இந்தியாவில் கொடுக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். அந்த காரணத்திற்காக, பூஸ்டர் டோஸ்களுக்கு இது ஒரு சிறந்த தடுப்பூசியாக கருதப்படவில்லை. முதன்மை டோஸிலிருந்து வேறுபட்ட தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், பூஸ்டர் டோஸ்கள் சிறப்பாகச் செயல்படும் என சுகாதார நிபுணர்களின் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
ஓரிரு நாட்களுக்கு முன்பு, அஸ்ட்ராஜெனெகா ஒமிக்ரான்-குறிப்பிட்ட தடுப்பூசியை உருவாக்குவதற்கான அதன் திட்டங்களையும் வெளியிட்டது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல்
ஒமிக்ரான் மாறுபாட்டின் தொற்றுநோய்களின் விரைவான எழுச்சிக்கு மத்தியில், ஐரோப்பாவின் பல நாடுகள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில், இளைய வயதினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிகக் குறைவாக இருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சில நாடுகள் பின்னர் 12-18 வயதினருக்கும் தடுப்பூசிகளைத் திறந்தன.
ஆனால் தடுப்பூசி போடப்படாதவர்கள், இளைய வயதினரும் கூட, ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள். பிரான்சில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், 6-10 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே தொற்று, பெரிய மக்கள் தொகையில், இரு மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேபோன்ற முறை இத்தாலியில் காணப்பட்டது, அங்கு சமீபத்திய பாதிப்புகளில் பெரும்பாலானவர்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்று செய்தித்தாள் கூறியது.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதாக பிரான்ஸ் தற்போது கூறியுள்ளது. ஜெர்மனி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போட தொடங்கியுள்ளன.
வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்ட 23 ஒமிக்ரான் வழக்குகளில் நான்கு மற்றும் குஜராத்தில் ஏழில் மூன்று பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
இங்கிலாந்து எழுச்சி தொடர்கிறது
இங்கிலாந்தில் வியாழக்கிழமை, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளது. புதன்கிழமை 1.06 லட்சத்துக்கு அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மட்டும் 1.19 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல ஸ்பெயினில் வியாழன் அன்று 50,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன், புதிய வழக்குகளின் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பிரான்சில், தினசரி வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 70,000 ஐத் தாண்டியுள்ளது, மேலும் இது விரைவில் 1 லட்சத்தைத் தாண்டும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்திருந்தார்.
source https://tamil.indianexpress.com/explained/recent-study-reveals-that-booster-dose-with-the-astrogenogen-vaccine-that-works-against-omicron-387573/