2 1 2023
இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், வேலைவாய்ப்பின்மை குறித்து ஒவ்வொரு மாதமும் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் இந்நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 0.3 உயர்ந்து, 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் நகர்ப்புறங்களில், நவம்பர் மாதம் 8.96 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 1.13 புள்ளிகள் உயர்ந்து, 10.09 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவு அதிகம் எனவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://news7tamil.live/unemployment-on-the-rise-in-india-shocking-information-in-study.html