புதன், 4 ஜனவரி, 2023

மாநில கல்விக் கொள்கையே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்’ – அமைச்சர் பொன்முடி

 

3 1 2023 

தமிழ்நாட்டிற்கென மாநில அளவிலான கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 6 மாதங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் நிரந்தர பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கென மாநில அளவிலான கல்விக்கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதுவே தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

source https://news7tamil.live/the-state-education-policy-will-be-implemented-in-tamil-nadu-minister-ponmudi.html

Related Posts: