துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
துருக்கியில் அடுத்தெடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பிரதிநிதி முகமது சபா, புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ட்விட்டரில் பதிவொன்றை எழுதியுள்ளார். அந்த பதிவில், ”தனது தம்பியின் தலையில் சேதமடைந்த கட்டடம் படாதாவாறு 7 வயதுள்ள சிறுமி தனது கையால் தடுத்துள்ளார். 17 மணி நேரம் இதேபோன்று கைகளை வைத்து தனது தம்பியை அந்த சிறுமி பாதுகாத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிறுமி மேற்கொண்ட செயல் பலரும் பாராட்டி வருகின்றனர். மற்றும் சிலர் பலரையும் மீட்டு வரும் மீட்பு படையினரை பாராட்டி வருகின்றனர்.
source https://news7tamil.live/seven-year-old-girl-protects-little-brother-under-rubble.html