வியாழன், 27 மே, 2021

சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

26.05.2021 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக 35,000 ஐ தாண்டி வந்துள்ள நிலையில், தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. இதேபோல் சென்னையிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கின் பலனாக சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மே 10 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 24 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-cases-falling-in-chennai-due-to-lockdown-307112/

 சென்னையைப் பொறுத்தவரை தொற்று பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட கிட்டதட்ட 5% அளவிற்கு குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சி அளித்துள்ள தகவலின் படி, கடந்த மே 17ல் சென்னையில் 6,627 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் மே 24ல் 6,194 ஆக குறைந்துள்ளது.

இதேபோல் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 14% அளவிற்கு குறைந்துள்ளது. இது கடந்த வாரங்களில் 890 ஆக இருந்த நிலையில் தற்போது 765 ஆக குறைந்துள்ளது.

சென்னையின் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 28.8% சதவீதம் அளவிற்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அடுத்ததாக மத்திய மண்டலத்தில் 14%மும், வடக்கு மண்டலத்தில் 7.5%மும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைப் பொறுத்தவரை தற்போது, வடக்கு மண்டலத்தில் 170, மத்திய மண்டலத்தில் 422, தெற்கு மண்டலத்தில் 173 பகுதிகளும் உள்ளன.

சென்னையில் உள்ள மொத்தம் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தொற்று பரவல் குறைந்துள்ளது. குறிப்பாக வளசரவாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 33% வரை தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளின் எண்ணிக்கை 42ல் இருந்து 53 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதை நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில், பீம்னாம்பேட் வார்டில் மட்டுமே 20க்கும் அதிகமான நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளது. ஆனால் கடந்த மே 17ல் 4 வார்டுகளில் 20க்கும் அதிகமான நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தது.

திரு.வி.க நகர், ராயபுரம் போன்ற மண்டலங்களிலும் கணிசமான அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ராயபுரம் மண்டலத்தில் தொற்று பாதிப்பு 2411ல் இருந்து 1970 ஆக குறைந்துள்ளது. இதேபோல், திரு.வி.க நகர் மண்டலத்தில் 3942ல் இருந்து 3566 ஆக குறைந்துள்ளது.

தற்போது அமல்படுத்தியுள்ள ஊரடங்கு சென்னையில் நல்ல பலனை தந்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.