2 7 23
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் கூறுகையில், “மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், மணிப்பூரை உடைக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், மாநிலத்தில் தனி நிர்வாக அதிகாரம் இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் சனிக்கிழமை கூறுகையில், “மணிப்பூர் மாநிலத்தில் மேய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் இன மோதல்களில் சர்வதேச தூண்டுதலை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது” என்றாலும், இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது” எறு கூறினார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இந்த வார தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார். ஏனெனில், பொதுமக்கள் தன் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்ற அச்சம் காரணமாக ராஜினாமா குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறினார். ஆனால், அவருக்கு மக்கள் ஆதரவு காட்டியது அவருடைய மனதை மாற்றியது.
மணிப்பூரில் மே 3 முதல் மேய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் மேய்தி மக்கள் பட்டியல் பழங்குடியினர் வரிசையில் சேர்ப்பது சாத்தியம்.
01
‘நீண்ட, நுண் ஓட்டைகள் நிறைந்த இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள எல்லா ஓட்டைகளையும் இந்திய பாதுகாப்புப் படையால் மறைக்க முடியாது – பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், அம்மாநிலத்தில் நடந்து வரும் இன மோதல்களில் சர்வதேச கைவரிசை குறித்து கேட்டபோது, “மணிப்பூர் மியான்மருக்கு அண்டை நாடு, சீனாவும் அருகில் உள்ளது. எங்களிடம் 398 கிமீ நீள நுண் ஓட்டைகள் உள்ள பாதுகாப்பற்ற எல்லை உள்ளது. இந்தியப் பாதுகாப்புப் படைகள் எங்களைக் காத்து வருகின்றன. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் அடைக்க முடியாது. அங்கு என்ன நடக்கும் என்பதை யாரும் கற்பனை செய்து பார்க்க முடியும்… இப்போது என்ன நடக்கிறது, அதில் சர்வதேசத் தூண்டுதலை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது. இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. ஆனால், காரணம் தெளிவாக இல்லை.” என்று கூறினார்.
02
மணிப்பூரை உடைக்க அனுமதிக்க மாட்டேன் என முதல்வராக நான் உறுதியளிக்கிறேன் – பிரேன் சிங்
மணிப்பூரில் உள்ள குகி பழங்குடியினருக்கு தனி நிர்வாக அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை விவாதித்த பிரேன் சிங், “நாங்கள் ஒரே மக்கள், மணிப்பூர் ஒரு சிறிய மாநிலம், ஆனால், எங்களிடம் 34 பழங்குடியினர் உள்ளனர். இந்த 34 பழங்குடியினரும் ஒன்றாக வாழ வேண்டும்… முதல்வராக, மணிப்பூரை உடைக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், மாநிலத்தில் தனி நிர்வாக அதிகாரம் இருக்காது என்றும் உறுதியளிக்கிறேன். அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க நான் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்.
03
‘மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ – பிரேன் சிங்
மணிப்பூரில் நல்லிணக்கம் பற்றி என். பிரேன் சிங் பேசுகையில், “வெளியில் இருந்து அதிகம் பேர் இங்கு வந்து குடியேறக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
04
‘என் குக்கி சகோதர சகோதரிகளிடம் பேசினேன், மன்னிப்போம், மறப்போம்’ என்று பிரேன் சிங் கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரேன் சிங் உறுதியளித்தார். “சில மணிநேரங்களுக்கு முன்பு, நான் எங்கள் குக்கி சகோதர சகோதரிகளுடன் தொலைபேசியில் பேசினேன், மன்னிப்போம், மறப்போம்; சமரசம் செய்து, எப்போதும் போல ஒன்றாக வாழ்வோம்… மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை” என்று அவர் கூறினார்.
05
மேய்தி மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதை எனது அரசு இன்னும் பரிந்துரைக்கவில்லை – பிரேன் சிங்
இந்த ஆண்டு மே 3 முதல் மாநிலத்தை மூழ்கடித்துள்ள வன்முறையின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து கேட்டபோது, தானும் குழப்பத்தில் இருப்பதாகவும், மோதலுக்கு வழிவகுத்த பேரணியை ஏற்பாடு செய்தவர்களால் மட்டுமே இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்று பிரேன் சிங் கூறினார்.
“பழங்குடியினர் பட்டியலில் மேய்தி சமூகத்தை சேர்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு எங்கள் அரசுக்கு உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஒருமித்த கருத்து முக்கியம் என்று கூறியிருந்தேன்… எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், இது எல்லாம் நடந்துவிட்டது” என்று கூறினார்.
06
‘பொதுமக்கள் ஆதரவு இல்லையென்றால், பதவியில் இருப்பது அர்த்தமில்லை – பிரேன் சிங்
பிரேன் சிங் கடந்த வாரம் முதல்வர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா செய்ய இருந்தார் என்றும், தனது திட்டங்களை கைவிட்டது பற்றியும் பேசினார்.
“பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உருவ பொம்மைகளை மக்கள் எரிக்கத் தொடங்கிய பிறகும், இம்பாலில் உள்ள பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்ட பிறகும், மக்கள் இன்னும் நம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா என்று நான் சந்தேகிக்க ஆரம்பித்தேன். பொதுமக்களின் ஆதரவு இல்லை பதவியில் இருப்பது எந்த அர்த்தமும் இல்லை. இது என் கருத்து… நேற்று, மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் பார்த்தேன், அதனால்தான் மணிப்பூருக்காகவும், கட்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று பிரேன் சிங் கூறினார்.
07
‘காங்கிரஸால் விதைக்கப்பட்ட விஷப் பழங்களை நாங்கள் உண்கிறோம் – பிரேன் சிங்
பிரேன் சிங்கை ராஜினாமா செய்யக் கோரி வரும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரேன் சிங், “அவர்கள் விதைத்த விதைகளை நாங்கள் உண்ணுகிறோம்” என்று கூறினார்.
“இந்த பிரச்சனைகள் எங்கிருந்து வந்தன? இவை ஆழமாக வேரூன்றியவை, இன்று தோன்றிய பிரச்சனைகள் அல்ல, காங்கிரஸ் போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள்: அவர்கள் விதைத்த விஷப்பழங்களை நாங்கள் உண்கிறோம். யாருடைய தவறு என்று உலகம் முழுவதும் தெரியும். குக்கி மக்களுக்கும் மேய்தி மக்களுக்கும் இடையிலான இன மோதல் இரண்டு மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. இழப்புகள் மற்றும் இறப்புகள் இருந்தன, அதனால்தான், குக்கி போராளிகள் அந்த நேரத்தில் எழுந்தனர், அவர்களுக்கு 2005-2018 முதல் 13 ஆண்டுகள் இலவச ஓட்டம் வழங்கப்பட்டது. அதனால்தான், இது நடக்கிறது” என்று பிரேன் சிங் குற்றம் சாட்டினார்.
08
‘ராகுல் காந்தி மணிப்பூருக்கு அரசியல் திட்டத்துடன் வந்தார் – பிரேன் சிங்
சமீபத்தில் மணிப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் பிரேன் சிங் கடுமையாக சாடினார்.
“யாரையும் தடுக்க முடியாது. ஆனால், 40 நாட்களாகிவிட்டன. அவர் ஏன் முன்னதாக வரவில்லை? அவர் ஒரு காங்கிரஸ் தலைவர், ஆனால் அவர் எந்த நிலையில் வருகை தந்தார்? இந்த நேரம் சரியானதாக இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் திட்டங்களுடன் வந்துள்ளார். அவர் வந்தார். அப்போது மார்க்கெட்டில் நடந்த சம்பவம், பா.ஜ.க அலுவலகம் தாக்கப்பட்டது. மாநில சூழ்நிலைக்காக வந்தாரா அல்லது அரசியல் லாபத்துக்காக வந்தாரா? அவர் வந்த விதத்தை நான் ஆதரிக்கவில்லை.” என்று பிரேன் சிங் கூறினார்.
09
உள்துறை அமைச்சர் நிலைமையை 24X7 நேரமும் கண்காணிக்கிறார் – பிரேன் சிங்
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து பிரேன் சிங் பேசுகையில், “இந்தியா போன்ற பெரிய நாட்டின் உள்துறை அமைச்சர் (அமித் ஷா) மணிப்பூரில் பல நாட்கள் தங்கியிருந்து, 24×7 நிலைமையை கண்காணித்து வருகிறார்” என்று கூறினார்.
10
‘மியான்மர் கொந்தளிப்பை அடுத்து வெளியில் இருந்து வருபவர்களை சோதனை செய்ய அரசு முயற்சி – பிரேன் சிங்
மணிப்பூரில் நல்லிணக்கத்தையும் இயல்புநிலையையும் உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று வலியுறுத்திய பிரேன் சிங், “மியான்மர் கொந்தளிப்பை அடுத்து வெளியில் இருந்து வரும் மக்களைத் சோதனை செய்து நிலைமை மேம்பட்டவுடன் அவர்களைத் திருப்பி அனுப்ப மட்டுமே அரசாங்கம் முயற்சி செய்துள்ளது” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/manipur-violence-cm-biren-singh-rahul-gandhi-china-myanmar-713393/