ஞாயிறு, 9 ஜூலை, 2023

மின் கட்டண உயர்வு : நெருக்கடியில் ஸ்பின்னிங் மில் கூட்டமைப்பு பேராட்ட அறிவிப்பு

 கழிவு பஞ்சின்  விலையேற்றம்  மற்றும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் ஸ்பின்னிங் (OE) மில்கள் கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், வரும் ஜூலை 10 தேதி முதல் வேலை  நிறுத்த போராட்டத்தைக்  ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 600″க்கு மேற்பட்ட ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகிறது. இவற்றில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல் மற்றும் 15 லட்சம் கலர் நூல் உற்பத்தி செய்து நாடு முழுவதும் உள்ள விசைத்தறிகளுக்கு அனுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக கழிவு பஞ்சின்  விலையேற்றம்  மற்றும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் “OE” மில்கள் கடும் நெருக்கடியில் இருப்பதால் வரும் ஜூலை 10 தேதி முதல் வேலை  நிறுத்த போராட்டத்தைக்  ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த   ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் கூட்டமைப்பின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “OE” மில்களின் மூலப்பொருட்கள் காட்டன் வேஸ்ட் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் தட்டுபாடும் எற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மின்சார கட்டண உயர்வாலும் தாங்கள் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் மத்திய அரசு மூலப் பொருட்களாக காட்டன் வேஸ்ட் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் எனவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு   உடனடியாக  மத்திய ,மாநில அரசுகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-penning-mil-association-announced-protest-on-july-10th-718836/