வியாழன், 20 ஜூலை, 2023

மணிப்பூர் வன்முறை – நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

 

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளன.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

இந்த கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் ஒத்திவைப்பு தீர்மான அனுப்பியுள்ளனர்.

இரு அவைகளிலும் காங்கிரஸ், திமுக, சிபிஐ, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களின் நோட்டீஸை ஏற்க அவைத் தலைவர்கள் நிராகரிக்கும்பட்சத்தில், கூட்டத்தின் முதல் நாளே அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://news7tamil.live/manipur-violence-adjournment-resolution-notice-in-parliament.html