திங்கள், 10 ஜூலை, 2023

தமிழக அமைதிக்கு ஆளுனர் அச்சுறுத்தல்’: முதல் முறையாக ஜனாதிபதிக்கு ஸ்டாலின் அதிரடி புகார் கடிதம்

 8 7 23

ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு 19 பக்க புகார் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தக் கடிதத்தில், ஆளுனர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக உள்ளது.

தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, தமிழ்நாடு அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
சட்ட முன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். ஆர்.என்.ரவி மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கவிழ்க்கும் வாய்ப்புகளை ஆளுநர்கள் தேடுகின்றனர். ஆளுனர் பதவியேற்கும்போது எடுத்த உறுதிமொழியை அவர் மீறி இருப்பது தெரிகிறது.
வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அமைந்துள்ளது.

தனது நடத்தை, செயல்பாடுகள் மூலம், ஒருதலைபட்சமானவர், ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார்
ஆளுனர் பதவியில் ரவி நீடிப்பது பொருத்தமானதா என்பதைக் குடியரசுத் தலைவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-wrote-a-letter-to-the-president-against-the-governor-719394/

Related Posts: