2 9 23
‘One Nation, One Election’ Tamil News: அரசியலமைப்பில் பெரும் மாற்றங்கள், புதிய சட்டங்கள், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய சிக்கல்கள் இவைகள் தான் “ஒரு நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தை ஆளும் பா.ஜ.க அரசு செயல்படுத்துவதில் உள்ள முக்கிய சட்ட சவால்களாகும்.
ஒரே நேரத்தில் தேர்தலை அனுமதிக்கும் வகையில் மக்களவை அல்லது மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலத்தை மாற்றுவது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா எதிர்கொள்ளும் முதல் சவால் ஆகும். ஏன்னென்றால், மாநில சட்டமன்றத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக ஐந்தாண்டு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் 83(2) மற்றும் 172(1) பிரிவுகளின் படி, மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு முறையே “ஐந்து ஆண்டுகள்” மற்றும் “அதற்குமேல் இல்லை” என நிர்ணயம் செய்கின்றன. ஒருவேளை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழும் பட்சத்தில், அவை 5 ஆண்டுக்கு முன்பே கலைக்கப்படுக்கின்றன.
தேர்தல்களை நடத்தும் செயல்முறையை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவுகள் 14 மற்றும் 15 இந்த படி, அரசியலமைப்புச் சட்டத்தால் விதிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வரம்புக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
ஒரு அவை கலைக்கப்படும் போது அதன் பதவிக்காலம் குறைக்கப்படலாம். அரசு ராஜினாமா செய்தால் அது நிகழலாம். அரசு நீட்டிப்புக்கு அரசியலமைப்பில் கணிசமான சேர்க்கை தேவைப்படுகிறது. இந்த விதிகளில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இந்தச் சாத்தியமான திருத்தத்திற்கு பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், சட்டசபையை முன்கூட்டியே கலைப்பது கருத்தில் கொள்ளப்பட்டால், மாநிலங்களின் ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது.
அரசியலமைப்பின் 356 வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தில் தேர்தலை தாமதப்படுத்தினால், அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விதிக்க பரிந்துரைக்கிறது. ஆனால், இது அரிதாகவே நிகழும் என்கிறது. எவ்வாறாயினும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்தால் (breakdown of constitutional machinery) மட்டுமே ஆளுநரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். இதற்கும் திருத்தம் தேவைப்படலாம்.
சட்டத்தில் இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், தேர்தலுக்குப் பிறகு முக்கியமான பிரச்சினைகள் இருக்கும். தேர்தலில் தனிப்பெரும் கட்சி உருவாகத் தவறினால் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்பும் முன்கூட்டியே வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, 49 நாட்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கவிழ்ந்தது. அதனால், டெல்லியில் 2015 ஆம் ஆண்டு முன்கூட்டியே தேர்தல் நடந்தன.
பத்தாவது அட்டவணையின் கீழ் உள்ள விலகல்கள், திட்டமிடப்பட்ட நிலையான காலத்திற்கு இடையிலான தேர்தல்களில் முக்கிய காரணியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி மாறினால், அவர் புதிய தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சபைக்குள் நுழையலாம். 2018 ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில், ஐந்தாண்டு கால அட்டவணையை ஒரே நேரத்தில் நடத்துவதற்காக, “காலத்தை நினைவூட்டுவதற்காக” மட்டுமே இடைக்கால தேர்தல்களை சட்ட ஆணையம் முன்மொழிந்தது.
முதலமைச்சர் அல்லது பிரதமர் சபையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் போது இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்படலாம். மக்களவையில் குறைந்தபட்சம் ஏழு முறை இடைக்காலத் தேர்தல்கள் நடந்துள்ளன. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், 1999 ஆம் ஆண்டு 12வது மக்களவை அரசு அமைக்கப்பட்டு 13 மாதங்களில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/legal-challenge-to-face-one-nation-one-election-idea-in-tamil-747567/