India TV CNX Poll: 2024 மக்களவை (லோக்சபா) தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐந்து முக்கிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, 2024 தேர்தலையும் இலக்காகக் கொண்டு பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்களின் மனநிலையை கணிக்க இந்தியா டிவி வியாழக்கிழமை (அக்.5) ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வியும் கேட்டகப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டு நிலவரமும் அலசப்பட்டது. இது குறித்து இங்கே பார்க்கலாம்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்தியா தொலைக்காட்சி நடத்திய கருத்துப்படி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக 31 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அதிமுக 25 சதவீத வாக்குகளைப் பெறலாம். 2024 தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஸ்டாலின் தலைமையிலான கட்சி முறியடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 சதவீத வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறக்கூடும்.
பாஜக பூஜ்யம்?
இம்மாநிலத்தில் திமுகவுக்கு 21 லோக்சபா தொகுதிகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. தமிழகத்தில் 7 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுபுறம், மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் போகலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
source https://tamil.indianexpress.com/india/india-tv-cnx-poll-says-dmk-congress-to-sweep-tamil-nadu-again-in-lok-sabha-elections-1511652