Puducherry: புதுச்சேரியில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி மின்சார துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது பின்வருமாறு:-
புதுவை அரசின் மின் கொள்முதல் மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படுகிறது. விலை அதிகரிப்பால் நுகா்வோா் மின் கட்டணம் உயா்கிறது. எனவே, மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில், மத்திய தொகுப்பிலிருந்து புதுவைக்கு ஒதுக்கீடு செய்யும் மின் கொள்முதலைக் குறைக்கவும், குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் வழங்கும் மின்நிலையங்களுக்கு அனுமதி அளிக்கவும் கோரி மத்திய மின்துறை அமைச்சா் வி.கே.சிங்கிற்கு புதுவை மின்துறை அமைச்சா் நமச்சிவாயம் கடிதம் எழுதியுள்ளாா். அதன்படி, மின் கொள்முதல் விலையைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/puducherry-minister-namassivayam-on-electricity-tariff-reduction-tamil-news-1511197