புதன், 11 அக்டோபர், 2023

3 மணி நேரத்தில் கப்பலில் இலங்கை பயணம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

 

Nagai Sri Lanka ship transport

இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு அக்.8 ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் தொடங்கியது.

தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சுமார் 40 ஆண்டுகள் கழித்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு அக்.8 ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்தக் கப்பலை இயக்கும் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் மட்டும் சோதனை ஓட்டமாக கப்பலில் பயணம் செய்தனர். நாகையில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும் இந்தக் கப்பல் மீண்டும் அங்கிருந்து மாலை நாகை துறைமுகத்திற்கு வந்து சேரும்.

இந்தக் கப்பலுக்கு கட்டணமாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.6,500 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி சேர்த்து ஒரு நபருக்கு ரூ.7670 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இதுவரை 14 நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து ஆர்வத்துடன் காத்திருப்பதாக நாகை துறைமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் போக்குவரத்து இன்று (அக்.10) தொடங்கப்பட இருந்த நிலையில் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாகப்பட்டினம் போர்ட் கேவிபி ஷிப்பிங் இயக்குனர் சயீத் ஆஸிப் ஜூகைர் தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/nagapattinam-sri-lanka-cruise-fare-is-fixed-at-rs-7670-1516708