வியாழன், 4 ஏப்ரல், 2024

காஸாவில் இதுவரை 33 ஆயிரம் பேர் உயிரிழப்பு! இஸ்ரேல் தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

 

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.  அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.  அத்துடன்,  200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  தெற்கு காஸா நகரான ராபாவில் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில் இரண்டு வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், 3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 33,037 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும்,  75,668 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.



source https://news7tamil.live/israel-hamas-war-death-toll-exceeds-33000-in-gaza.html#google_vignette