ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி!

 கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்களே மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கிரெடிட் கார்டு மாதாந்திர பில் தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து அதிகபட்சமாக 15 நாள்களுக்குள் தாங்கள் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.  அந்த தொகையை சரியான தேதிக்குள் செலுத்தமுடியாமல் போனால் அபராதத் தொகை,  அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

 

இந்த நிலையில்,  இந்திய ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன்படி கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்களே மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர் அந்தந்த வங்கிகளின் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/important-notice-for-credit-card-users.html