வியாழன், 8 அக்டோபர், 2015

முல்லை வனம்

பசுமை ஹாஜி's photo.
பசுமை ஹாஜி's photo.
பசுமை ஹாஜி's photo.
பசுமை ஹாஜி's photo.

பெயரோ : முல்லை வனம்
உள்ளமோ : நந்த வனம்
06.10.2015 மதியம் சென்னை பெசன்ட் நகரில் திரு. Mullaivanam Treebankஅவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னால் ஜனாதிபதி . அப்துல் கலாம் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்வதே தனது குறிகோளாய் எண்ணி செடி நடுவதிலும் இலவசமாக வினியோகிப்பதிலும் சாதனை செய்துக்கொண்டுள்ளார். தனது 18 வயதில் செடி நடுவதற்கு ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செடி நட்டிவருகிறார். இவரது நற்பணியை பல அரசியல் பிரபலங்கள் இவரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுவரை 92 லட்சம் மரக்கன்றுகளை நட்டியுள்ளதாக கூறும் திரு.முல்லை வனம் அவர்கள் கூடிய விரைவில் 1 கோடி மரக்கன்றுகள் நட்டி கலாம் அவர்களின் ஆசையை பூர்த்தி செய்வேன் என்று கூறுகிறார் .
நான் இவரை சந்திக்க செல்லும் சமயம் அரசாங்க பள்ளி ஒன்றில் செடி நடுவதற்கான ஆயத்த பணிகளில் இருந்தார் ! என்னிடம் மிக இயல்பாக மிக அன்புடன் பேசி பழகினார். இவருடைய வாழ்க்கை நிலமை ? இப்பொழுதும் சொந்த இடமின்றி அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறார்.தனது பிள்ளைகளையும் பொது சேவையை தொடரவைக்கும் எண்ணத்தில் இவரது நற்பணியில் ஈடுபடுத்திவருகிறார் ! இந்த திரு. முல்லை (நந்த) வனம் ஊரையும் பசுமையாக்கி இவரும் இவர் குடும்பத்தினரும் செழிப்புடன் நீடூழி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.
சென்னை நண்பர்கள் தங்கள் வீட்டருகில் செடி நடுவதற்கு ஆலோசனை மற்றும் உதவிக்கு திரு.Mullaivanam Treebank அவர்களை 9944004310 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்வோம் வளமுடன்...
வளர்வோம் மரங்களுடன்...

Related Posts: