ஞாயிறு, 11 அக்டோபர், 2015

"நியூ சன்டே எக்ஸ்பிரஸ்" ஏட்டில் ஓர் ஆபத்தான செய்தி வந்துள்ளது

ராணுவத்திற்குள் ஆர்எஸ்எஸ் நுழைகிறது!
"நியூ சன்டே எக்ஸ்பிரஸ்" ஏட்டில் ஓர் ஆபத்தான செய்தி வந்துள்ளது. அதன் தலைப்பு:
"எல்லைகளைக் காப்பதில் பங்கு கேட்கிறது சங் ". உள்ளே இந்த மேல் விபரம்
உள்ளது: "இது தொடர்பாக கடந்த மாதத்தில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரின் 
முன்னிலையில் ஆர் எஸ் எஸ் -பா ஜ க விடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முடிவில் இது விஷயத்தில் ஆர் எஸ் எஸ் துணை அமைப்புகளை அல்லது அவற்றின்
அறிவுஜீவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான செயல்திட்டம் ஒன்றைத்
தயாரிப்பது என்று முடிவானது". ஜனநாயகத்தை என்றும் ஆர்எஸ்எஸ் விரும்பியதில்லை.
"இந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும் ராணுவத்தை இந்துமயமாக்க வேண்டும் "
என்று சொன்னவர் அதன் பிதாமகர் கோல்வால்கர் . ராணுவத்தை தங்கள் பிடியில்
கொண்டு வந்து நாட்டை நிரந்தரமாக ஆள்வதே அவரின் திட்டமாக இருந்தது .
அதற்காகத்தான் இப்போது ராணுவத்திற்குள் நுழைகிறார்களோ என்னவோ ? இந்த
பேராபத்தை உணர்ந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் ஆர் எஸ் எஸ் சின்
இந்த முயற்சியை .தும்பை விட்டு வாலைப் பிடிக்கக்கூடாது ஜனநாயக சக்திகள்.

Related Posts: