ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வீட்டுத்தோட்டத்தில் மணத்தக்காளி கீரை .


===================================
மணத்தக்காளி வளர்க்க வீட்டின் பின்புறம் கொஞ்சம் இடம் தோட்டத்தில் ,அல்லது நாலு ஐந்து கிலோ அரிசி கோணிப்பைகள் /அல்லது நான்கு மீடியம் அளவு மண் தொட்டிகள் இருந்தாலே போதுமானது .
தொட்டி அல்லது பையில் மண் நிரப்பும்போது ஆற்று மணல், செம்மண் மற்றும் உதிர்த்த தேங்காய்மட்டை ஆகிய மூன்றையும் கலந்து நிரப்பவும். 
தரை என்றால் அந்த பகுதியை கொத்தி சமன்படுத்தவும் பின்பு உரக்கலவையை இட்டு மீண்டும் கொத்தி கிளறவும் .வளர்க்கும் மீடியத்தை தயார் செய்தவுடன் அதில் விதைகளை உதிர்த்து தூவ வேண்டும் .விதைகள் பெரும்பாலான நர்சரிகளில் கிடைக்கும் அப்படி கிடைக்காத பட்சத்தில் கவலை வேண்டாம் smile emoticon நேரே காதி பவன் அல்லது வற்றல் வடகம் விற்கும் கடையில் ஒரு பாக்கெட் மணத்தக்காளி வற்றல் வாங்கி வந்து கையால் உதிர்த்து தூவி விட்டால் போதும் .ஒரு வாரத்தில் முளைத்து விடும் .தொட்டியில் தூவும்போது கொஞ்சம் இடைவெளி விட்டு தூவ வேண்டும் .
ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் வளரும் அளவு இருக்கணும் .

படத்தில் நான் வற்றல் தூவி வளர்த்த மணத்தக்காளி செடிகள் ..
தரையோ தொட்டியோ அல்லது கண்டேய்னரோ மணத்தக்காளி செடி வளர்ந்து காய்கள் பழுத்த நிலைவரும்போது ஒன்றிரண்டு பழங்களை பறித்து ஒரு டிஸ்யூ காகிதத்தில் சற்று அழுத்தி காய வைத்து பத்திரப்படுத்தி விட்டால் தேவையான நேரம் விதைகளை பயன்படுத்தலாம் .ஒன்றிரண்டை செடியில் விட்டு வைத்தால் அவை தரை /தொட்டியில் விழுந்து அடுத்த சீசனுக்கு மீண்டும் முளைக்கும் ..
மணத்தக்காளி தண்டுகளை நட்டு வைத்தாலும் வளருமாம் நட்பு ஒருவர் அனுபவம் இது முயற்சித்து பாருங்களேன் நீங்களும் .

Related Posts: