'குல்பர்கா' ரயில் நிலையத்தில் போலீஸ் அராஜகம்..!
அகீப் அலி என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர், குடும்பத்துடன் ஹைதராபாத் செல்வதற்காக குல்பர்கா ரயில் நிலையத்துக்கு வந்தபோது 'ஆர்பிஎப்' போலீசால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து 'ஃபிதா-யே-மில்லத்' என்ற உள்ளூர் அமைப்பின் வழக்கறிஞர் 'வஹஜ் பாபா' என்பவர் தலைமையில், ரயில் நிலைய RPF அலுவலகத்தை முற்றுகையிட்டு சம்மந்தப்பட்ட கான்ஸ்டபில் மீது 'எப்ஐஆர்' பதிவு செய்துள்ளனர்.
மேற்படி RPF கான்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய உயரதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார்,வழக்கறிஞர் 'வஹஜ் பாபா'
தவறும் பட்சத்தில் குல்பர்கா ரயில் நிலையத்தை முற்றுகையிடப் போவதாகவும் 'ஃபிதா-யே-மில்லத்' அறிவிப்பு செய்துள்ளது.