வியாழன், 7 ஜனவரி, 2016

முகநூல் வாயிலாக பரவிக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டின் உண்மை நிலை

செங்கிஸ் கான்  மௌத்தாகிவிட்ட நிலையில் அவரை குறித்து “தவ்ஹீத் எக்ஸ்பிரஸ்” மற்றும் “அஹ்மத் கபீர்” என்ற முகநூல் வாயிலாக பரவிக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டின் உண்மை நிலையை தெரிந்துகொள்ள சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சேப்பாக்கம் கிளை நிர்வாகிகளாக இருந்தவர்களை நானும் எங்கள் குடும்பத்தினரும் அணுகினோம்,
அப்போது அவர்கள் அனைவரும் இது என் தந்தையின் கண்ணியத்தை மக்கள் மத்தியில் சிதைக்கும் வகையில் வேண்டுமென்றே சில புல்லூருவிகள் செய்த சதிவேலை, இதில் குறிப்பிட்டுள்ள பொருளாதார குற்றச்சாட்டுகள் அனைத்தும் அல்லாஹ்வின் மீது ஆணையாக முழுக்க முழுக்க பொய் என்றும் மேலும் இது சம்பந்தமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) நிர்வாகிகள் மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அறிக்கை ஒன்றைவெளியிட்டனர் அவையாதெனில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது பொறுப்பில்
Fb.com/thowheedJamath,
Fb.com/onlinepj.tntj
ஆகிய முகநூல் பக்கங்கள் மற்றும்
Onlinepj.comtntj.netvideo.onlinepj.com,
thowheedvideo.com, tntj.tv,
jesesinvites.com
ஆகிய இணையதளங்கள் மட்டுமே நடத்தி வருகிறது
“அஹ்மத் கபீர்” என்ற பெயரிலும் இன்னும் பல
பெயரிலும் சில தனி நபர்கள் நடத்தும் முகநூல்
இணையதளம் உள்ளிட்ட எந்த ஊடகத்தில்
வெளியாகும் எந்த செய்திகளுக்கும் ஜமாஅத் பொறுப்பல்ல
அவை ஜமாஅத்தின் அதிகாரபூர்வ கருத்து அல்ல என்பதை
தெரிவித்துக் கொள்கிறாம்
என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் M. முஹம்மது யூசுஃப் அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள அறிக்கையை அளித்துள்ளார் எனவும்,
மேலும் முன்னாள் சேப்பாக்கம் TNTJ கிளை நிர்வாகிகளான நாங்களும் எழுத்துபூர்வமாக எழுதித்தருகிறோம் என்று கூறி அதன் அடிப்படையில் எழுதி கையேப்பமிட்டு அளித்துள்ள கடிதத்தை இந்த முகநூலில் ஏற்றம் (ATTACH) செய்துள்ளேன்.
என் தந்தையின் மீது தாங்கள் காட்டிய அன்புக்கு என் சார்பாகவும் எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் உளபூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொண்டு வல்ல ரஹ்மான் நம் அனைவரயும் நேரான வழியில் செலுத்தி இம்மையிலும் மறுமையிலும் மகத்தான வெற்றியை தருவானாக என்று துஆ செய்தவன்னமாக விடைபெறுகிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் வா ரஹஅமதுல்லாஹி வா பரகாத்துஹு


இப்படிக்கு
செங்கிஸ் கான் அவர்களின் மூத்த மகன்
ஐடித் ஹுசைன்

Related Posts:

  • பணம் பன்ன இவ்வளவு கொடூரமான வழியா? மனசாட்சியற்ற மிருகங்கள் … Read More
  • வழக்கறிஞர் புகழேந்தி அம்பத்தூர் அபு ஆகியோர் காவலர்களால்கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்இவர்கள் நடக்கவே கஷ்டப்படுவதாகவும்அபுவிற்கு கை நரம்பு அறுந்து இரத்தம் வந்துகொண்டே இருந்… Read More
  • வாட்ஸ்அப் பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியு… Read More
  • வருமான வரி சோதனையை தவிர்க்க..! வருமான வரி சோதனையை தவிர்க்க..!* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்து… Read More
  • மழையின் பயணம் என்றும் மண்ணோடுதான்.... சேகுவேராவையும், லெனினையும், உமர் முக்தாரையும், காந்தியையும், நேதாஜியையும் கற்றுள்ள இந்திய முஸ்லிம் சமுதாயம் இனி ஹிட்லரையும், முசோலினியையும் கூட க… Read More