வியாழன், 8 மார்ச், 2018

இந்து மத தெய்வத்தின் படத்தை தீயிட்டுக் கொளுத்தி முகநூலில் பதிவேற்றிய கொற்றவை! March 7, 2018

Image

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துமதக் கடவுள் படத்தையும், மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்தி பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான கொற்றவை நூதன போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, வீடியோ பதிவொன்றை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். லெனின் சிலையைத் தொடர்ந்து நாளை பெரியார் சிலை என ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறப்பட்டிருந்ததை எடுத்துக்காட்டியுள்ள கொற்றவை, இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை சேதம் செய்யப்பட்டதை அடுத்து, அப்பதிவை தான் இடவில்லை தனது அட்மீன் தான் இட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள கொற்றவை, இவைகளின் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளதையும், தனது வீடியோவில் எடுத்துக்காட்டியுள்ளார்.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் இந்துமதத்தின் பேரில் வெறுப்பை வளர்ப்பதாகவும், சக மனிதர்களை பிரித்தாண்டு வெறுப்பை வளர்த்து தங்களின் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் முன்வைக்கும் இந்துமத நம்பிக்கையை எதிர்க்க வேண்டும், தகர்க்க வேண்டும் என்பதற்கான போராட்டம் இது என கொற்றவை குறிப்பிட்டுள்ளார். 

நாம் செய்ய வேண்டியது மக்களுக்காக போராடிய தலைவர்களின் படங்களை எரிப்பது அல்ல என்றுக் கூறியுள்ள கொற்றவை, மூடநம்பிக்கையையும், அதற்கு மூலதாரமான மத  நம்பிக்கையை ஒதுக்கி வைக்கும் வகையிலும், பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்-ஐயும் வன்மையாக கண்டிக்கும் வகையில் கடவுள் படங்களை தீயிட்டு எரிப்பதாகக் கூறியதுடன், “கடவுள் இல்லை கடவுள் இல்லை” என்ற பெரியாரின் வாசகங்களை கூறியவாறு இந்துமதக் கடவுளின் படத்தை தீயிட்டு எரித்தார். 


இதனைத் தொடர்ந்து, அம்பேத்கரின் வழிமுறையை பின்பற்றி மனுஸ்மிருதியை எரிப்பதாகக் கூறி மனுஸ்மிருதி என்று எழுதப்பட்ட படத்தை தீயிட்டு கொளுத்தினார்.

Related Posts: