வியாழன், 8 மார்ச், 2018

ஆளத் தெரியாத இரண்டுபேர் நாட்டை ஆள்வதாக சுப வீரபாண்டியன் கடும் விமர்சனம்! March 8, 2018

Image

மத்திய அரசு பக்கோடா அரசாகவும், மாநில அரசு மிக்சர் அரசாகவும் செயல்படுவதாக சுப.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

திமுக- அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  இணைந்து, காவிரிக்காக குரல் கொடுத்திருப்பது  நாகரீகமான  நல்ல துவக்கம் என கூறினார். அதேநேரம், ஆளத் தெரியாத இரண்டுபேர் நாட்டை ஆள்வதாகவும், தலைவிக்குக் கூட சரியாக சிலை வைக்கத் தெரியாதவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

நடிகர்களை நம்பி நாடு சீரழிந்ததை  மக்கள் உணர வேண்டும் என குறிப்பிட்ட சுப.வீரபாண்டியன், மத்திய- மாநில அரசுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். 

Related Posts: