வியாழன், 8 மார்ச், 2018

“காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை!” : எடப்பாடி பழனிசாமி March 7, 2018

Image

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு இன்றுடன் முடிவடைந்தது. நிறைவு விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குற்றவாளிகள் மீது போலீசார் பாரபாட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும், கே.ஆர்.பி அணை ரூ.26 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் எனவும் கூறினார். 

மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார். காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

Related Posts: