வியாழன், 8 மார்ச், 2018

​"வருந்தியது அதிசயம், திருந்துவது அவசியம்" - அதிமுகவின் நாளிதழில் விமர்சனம்! March 8, 2018

Image
ஹெச்.ராஜா வருந்துவதை விட திருந்துவதே முக்கியம் என, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது புரட்சித் தலைவி அம்மா"-வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பெரியார் சிலை தொடர்பாக, பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது புரட்சித்தலைவி அம்மா", ராஜாவை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில், நாட்டை ஆளும் ஒரு தேசிய கட்சியின் தேசிய செயலாளர் இதுபோல் செயல்படுவது வேதனைக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு கோடாரியை, ஏதோ துரும்பென்று விமர்சித்துவிட்டு, பிறகு தேன் கூட்டில் கை வைத்தவன் கதையாக, கொட்டுதே குடையுதே என்றால் என்ன செய்வது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக் பதிவுக்கு அட்மினின் தவறு என காரணம் சொல்லி கம்பி நீட்டுவதெல்லாம் நாணயமற்ற காரியமே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடிவேலின் நகைச்சுவை போல குப்புற விழுவதும், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதும், சிலருக்கு பிழைப்பாகி விட்டது என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், வருந்தியது அதிசயம் என்றும், திருந்துவது அவசியம் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Related Posts: