ஒரு கிராமத்துக்கே இலவச ‘WIFI’ வசதியை வழங்கிய முஸ்லிம் என்ஜீனியரிங் மாணவி..!
அரசின் உதவி இல்லாமலேயே சாதனை படைத்த ஷகீல் அஞ்சும்..!
மத்திய பிரதேச மாநிலத்தின் ‘பாவ்டி கேடா’ என்ற முழு கிராம பஞ்சாயத்துக்கு, அரசின் உதவி இல்லாமலேயே இலவச ‘வை ஃபை’ வசதியை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார், முஸ்லிம் எஞ்சினியரிங் மாணவி, ஷகீல் அஞ்சும்.
ஷகீல் அஞ்சுமின் இப்பணியில், அவருக்கு உறுதுணையாக பானு, துஷார் பர்தாரே, அபிஷேக் பர்தாரே ஆகிய 3 மாணவர்கள் செயல்பட்டுள்ளனர்.
ஷகீல் அஞ்சும் குழுவினரின் இந்த இலவச சேவையை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தருண் குமார், ஷகீல் அஞ்சும் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.