திங்கள், 8 பிப்ரவரி, 2016

சீட் கேட்டு :உதவி கமிஷனர் ( A/C ) பீர் முகம்மது :மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உதவி கமிஷனர் ( A/C ) பீர் முகம்மது சென்னை
திருவல்லிக்கேனியில் சீட் கேட்டு அ.தி.மு.க.வில்
மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசுப் பணியில் இருந்து கொண்டு 
தேர்தலில் சீட் கேட்பதும், தேர்தலுக்கு
பிரசாரம் செய்வதும் இந்திய அரசியலில்
புதியது அல்ல. அந்த வகையில், சென்னை
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி கமிஷனர்
பீர் முகம்மது சென்னை திருவல்லிக்கேனியில்
சீட் கேட்டு அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல்
செய்துள்ளார்.
அவர் மனுத்தாக்கல் செய்து இரண்டு
நாட்கள் ஆன பின்னர்தான் இந்த விவகாரம்
காவல்துறை மத்தியில் பரபரப்பாக
விவாதிக்கப்படுகிறது.
சுமார் நான்கு ஆண்டுகளாக திருவல்லிகேனியில்
A/C ஆக பணியாற்றி வருகிறார் நேர்மையானவர் என
பெயர் எடுத்த பீர் முஹமது அ.தி.மு.க.வில்
திருவல்லிகேனி தொகுதியில் போட்டியிட
வேட்ப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக
இந்திய தேசிய லீக் கட்சி தலைமைக்கு
தெரிவித்தார் .
ஏதோ விளையாட்டுக்கு சொல்லுவதாக
நாம் நினைத்தோம் உண்மையில் வேட்ப்பு
மனு தாக்கல் செய்துள்ள தகவல் ஊடகத்தின்
மூலம் உண்மையாகி உள்ளது .
வாழ்த்துகள்
அன்புடன்
இந்திய தேசிய லீக் கட்சி