வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

‪#‎தினதந்தி_திருச்சி_பதிப்பக_நிர்வாகி_கைது‬!


மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தினதந்தி கு(டு)ழும்பம் .
நேற்று 16/02/2016 செவ்வாய் இரவு திருச்சி தினதந்தி பதிப்பகத்தில் ஆண் பெண் ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது திருச்சி தந்தி பதிப்பக நிர்வாகியும் ஆதித்தனாரின் தங்கை மகனுமான நரேந்திரன், பிழைத்திருத்தும் பொறுப்பிலிருக்கும் லால்குடியைச் சேர்ந்த சாந்தி என்ற பட்டதாரிப் பெண்ணை தன் அறைக்கு அழைத்து தனது மொபைல் போனில் ஆபாச படத்தைக்காட்டி தகாத முறையில் பேசி கற்பழிக்க முற்பட்டதாகவும் ஆனால் சாந்தி சப்தமிட்டு மற்ற ஊழியர்களை அழைத்தவுடன் ஆதித்தனின் தங்கை மகன் நரேந்திரன் அவரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும் இத்துடன் இந்த விசியத்தை விட்டுவிட வேண்டுமென்றுக் கெஞ்சியுள்ளார்.
ஆனால், இது முதல் முறையில்லை நான் மட்டுமல்ல இங்கு பணியிலுள்ள பெண் ஸவீப்பர் உட்பட நிர்வாகத்திலுள்ள பெண்கள் வரை இவர் இப்படி வழக்கமாக நடந்துக்கொள்வதாக கூறி சமாதானமடையாத ஊழியர் சாந்தி திருச்சி மாநகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்றுக்கொள்ள மறுத்த மாநகர காவல்துறை நரேந்திரனைக் கைதுச் செய்ய முடியாது எனவும் மறுத்துள்ளனர் உடனே திருச்சி தினதந்தி அலுவலக ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிச்செய்ய மறுத்ததுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அதன்பின் இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்தரின் நரேந்திரன் மீது வழக்குப்பதிவுச் செய்து FIR போட சம்மதித்தார்.
பின்னர் செய்தியாளர்களை ஒட்டுமொத்தமாகச் சந்தித்த தினதந்தி ஊழியர்கள்...தினதந்தியின் திருச்சி பதிப்பகம் மட்டுமல்ல மற்ற நகரங்களிலுள்ள ஏனைய தினதந்தி பதிப்பகங்களிலும் இதுப்போன்ற செக்ஸ் டார்ச்சர், சாதிவெறி மற்றும் மதவெறி தலைவிரித்தாடுவதாகவும் செய்தியாளர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்திகளை வெளிடுவதாகவும் அதங்கத்துடன் தெரிவித்தனர்.

Related Posts: