சனி, 6 பிப்ரவரி, 2016

கர்ப்பப்பை கட்டி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


பெண்களுக்கு கர்ப்பப் பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் ஃபைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன.
கருப்பை கட்டிகள் பொதுவாக புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை. பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரிய வராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு. பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன.
கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டியதாகும். இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.
கருப்பையில் கட்டி இருக்கும்போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்கவேண்டும் :
மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும்.
மாதவிடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப்போக்கு எற்படுவது.
இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம்.
சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல்.
மலச் சிக்கல்.
முதுகு வலி அல்லது கால்வலி.
தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப்பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் எற்படுத்தலாம்.
கருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதைதான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டிகொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறுநீரை அகற்றும் குழாயையோ அழுத்தும். இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம். கருப்பையின் பின்பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச் சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும்போது முதுகு வலி ஏற்படுகிறது.
காரணங்கள் :
மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம்.
இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து மருத்துவர்களுக்கு தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன :
மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் இது ஏற்படலாம். கருத் தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்டரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.
கருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொருத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த கட்டிகள் நிச்சயமாக புற்றுநோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை. இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கிவிடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள். அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது. இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவிகரமாக இருக்கும்