மாணவர் கன்ஹையா மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதலையும், கல்வீச்சு நிகழ்வையும் நடத்தியுள்ளனர் வழக்கறிஞர்கள் போர்வையில் உள்ள காவி காலிகள். மோடி அரசின் கீழ் இயஙகும் தில்லி காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்ததோடல்லாமல் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக அறிக்கை அளித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு தொடர்ந்தும் தன் காவி விசுவாசத்தைக் காட்டியுள்ளது
தன் உச்சிக்குடிமி மன்றத்திற்கு கீழே இவ்வளவு நடந்தும் அமைதி காக்கிறது உ. நீ. மன்றம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கையும் தள்ளி வைத்து தாக்குதலைத் தொடர வழி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறவழியில் போராடிய போது பொங்கி எழுந்து தங்களுக்கு ராணூவப்பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டனர். உச்சனீதிமன்றமும் அதை வழிமொழிந்ததோடல்லாமல் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக கடுமையான கண்டனத்தையும் நடவடிக்கை எடுக்க உத்தரவும் இட்டது.
உரிமைக்காக போராடியவர்கள் தீவிரவாதிகள், அடக்குமுறை வெறியாட்டம் ஆடுபவர்கள் தேசபக்தர்கள். இது தான் இந்துத்வ இந்தியா.