வியாழன், 18 பிப்ரவரி, 2016

‪#‎முஸ்லிம்‬ சிறைவாசிகளின் விடுதலை குறித்து

‪#‎முஸ்லிம்‬ சிறைவாசிகளின் விடுதலை குறித்து எல்லா இயக்கங்களும் போராட்டம் நடத்தி விட்டன. அதற்காக‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?
சிறைவாசிகளின் குடும்பத்தார் தவ்ஹீத் ‪#‎ஜமாஅத்‬நிர்வாகிகளை சந்தித்ததாகக் கூறப்படுவது உண்மையா? அதில் என்ன பேசப்பட்டது?
----------------------
பதில்.....
உண்மைதான்.
கடந்த சனிக்கிழமை அன்று சிறைவாசிகளின் குடும்பத்தார் தலைமையகத்தில் வைத்து நம்மைச் சந்தித்தனர்.
ஏற்கனவே ‪#‎ஷிர்க்‬ ஒழிப்பு மாநாட்டிற்கு முன் அல்தாஃபி அவர்கள் கோவை சென்றிருந்த போது அவர்களை நேரில் சந்தித்து தமது குடும்பத்தாரின் விடுதலைக்காக தவ்ஹீத் ஜமாஅத் போராட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அந்த வகையில் போராட்ட வழிமுறை குறித்தும் அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்குவதற்காகவும் அவர்களை நாம் அழைத்திருந்தோம்.
சிறைவாசிகளுக்காக பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் மக்கள் ஆதரவையும் அரசின் கவனத்தையும் ஈர்த்திருக்கிற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதைக் கையிலெடுத்தால்தான் விடுதலைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
எனவே இதற்காக நீங்கள் போராட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்கள்.
சிறைவாசிக்களுக்காக நடத்தப்படும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். விடுதலை செய்!
என்று நாம் போராடினால் மரண தண்டனை வழங்கு என‪#‎பரிவாரப்‬ படைகள் எதிர்ப் போராட்டங்களை நடத்தி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி விடுகிறார்கள்.
சமீபத்தில் இதற்காக நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு சிவசேனா சார்பில் பிப்ரவரி 14-ல் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தார்கள்.
முஸ்லிம் சிறைவாசிகளை ‪#‎பயங்கரவாதிகள்‬ என்றும் அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வலியுறுத்தியும் விஷம் கக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்கள்.
இப்படி ஒரு எதிர்வினை வந்தால் அரசாங்கம் என்ன செய்யும்?
நம்முடைய ஓட்டுக்களுக்காக கருணை காட்ட நினைக்கும் ஆட்சியாளர்கள் எதிர் ஓட்டுக்களை கணக்குப் பார்த்து விட்டு முன்பு இருந்ததை விட கூடுதலாகக் கடுமை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
எனவே இந்தப் பிரச்சனையை ஆர்ப்பாட்ட வடிவில் எதிர்கொள்வது ஆபத்தாகத் தெரிகிறது.
ஆகையால் இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டம் எதுவும் தற்போது தவ்ஹீத் ஜமாஅத்திடம் இல்லை என்பதை சிறைவாசிகளின் குடும்பத்தாரிடம் எடுத்துச் சொன்னோம்.
ஒருவேளை போராட்டம் நடத்துவதாக இருந்தால் அதற்கு தேர்தல் நேரம் கொஞ்சமும் பொருத்தமானதல்ல.
ஏனெனில் நெருக்கடியான எந்த முடிவுகளையும் ஆட்சியாளர்கள் பதவியேற்ற புதிதில்தான் எடுப்பார்கள்.
நான்கு ஆண்டுகளில் மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், பதவிக் காலத்தின் கடைசியில் விஷப் பரீட்சைக்கு யாரும் தம்மை உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
ஒருவேளை அரசு இவர்களை மன்னிக்க நினைத்தால் கூட இவர்கள் விடுதலையாகிவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
விடுதலையை எதிர்ப்போம் என்கிறார்கள்.
அதை நம்மிடம் வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறார்கள்.
ஏற்கனவே விடுதலையாகி வெளியில் வந்துள்ள சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.
இவர்களை வெளியே விட்டால் நமக்குத்தான் தலைவலி என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
எனவே நம்முடைய காய் நகர்த்தல்கள் கவனமாகவும், எதிரிகளை சீண்டாத வகையிலும் இருக்க வேண்டும்.
அதற்கு போராட்டம் உகந்த வழிமுறை அல்ல என்று எடுத்துச் சொன்னோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை மக்களை திரட்டி பேராட்டம் நடத்துவது சிரமமானதல்ல.
சில வருடங்களுக்கு முன்பாவது தவ்ஹீத் ஜமாஅத் தலையீட்டை சிறைவாசிகள் சிலர் விரும்பவில்லை.
அவர்களே விரும்பாத போது நாம் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி இருந்தது.
இப்போது அதுவும் அடிபட்டுப் போய் விட்டது.
எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று அனைவரும் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டால் சிறைவாசிகளுக்காக தவ்ஹீத் ஜமாஅத் எதுவும் செய்யவில்லை என்று அரசியல் செய்பவர்களின் வாய்களுக்கும் சீல் வைத்து விட முடியும்.
அதை விரும்புகிறவர்களின் அபிமானத்தையும் ஜமாஅத்திற்கு ஆதாயமாக்கிக் கொள்ள முடியும்.
ஒரு போராட்டத்தை நடத்தி விட்டால் அமைப்புக்கு இப்படி பல அனுகூலங்கள் இருந்தாலும் அவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு குற்றச்சாட்டுகளையும் சுமந்து கொண்டு நிற்பதற்குக் காரணம் அவர்களின் விடுதலையின் மீது கொண்டுள்ள உண்மையான அக்கறைதான் என்பதை எடுத்துச் சொன்னோம்.
அதே நேரத்தில் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளோம்.
ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் அனைவரையும் நேரில் சந்தித்து மற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதி முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது என்பதை விளக்கியுள்ளோம்.
பல்லாண்டுகாலமாக முஸ்லிம்களின் உள்ளத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தால் யார் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முஸ்லிம்களின் வாக்குகளை அதைச் சொல்லியே நீங்கள் பெற்றுவிட முடியும் என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைத்து காரியம் சாதிப்போம்.
அதுபோன்ற மறைமுக காய் நகர்த்தல்கள் அவர்களின் விடுதலைக்கு உதவும்.
அதை தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து செய்யும் என உறுதியளித்தோம்.
இதைத் தாண்டி போராட்டங்களை நீங்கள் விரும்பினால் அதை முஸ்லிம் சிறைவாசிகள் என்று சுருக்காமல் 12 ஆண்டுகளைக் கடந்து சிறையில் வாடும் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வையுங்கள்.
உங்களுக்காகப் போராட்டம் நடத்துபவர்களையும் அவ்வாறு வைக்கச் சொல்லுங்கள் என்றோம். ஏனெனில் முஸ்லிம் என்று சுருக்கும் போது அதை பயங்கரவாதிகளுக்கு ஆதரவான போராட்டமாக இந்துத்துவாவினர் திசை திருப்பி விடுகிறார்கள்.
அதனால் அரசாங்கமும் அதைப் பரிசீலிக்க மறுத்து விடுகிறது.
அனைவரையும் உள்ளே இழுத்துக் கொண்டால் அதில் மதச்சாயம் பூசி திருப்ப முடியாது.
அதனால் தான் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு தீர்மானத்தில் கூட முஸ்லிம் சிறைவாசிகள் என்பதைக் கவனமாகத் தவிர்த்து விட்டு 12 ஆண்டுகளைக் கடந்த அனைத்து சிறைவாசிகளையும் சாதி மத வேறுபாடின்றி விடுவிக்குமாறு தீர்மானம் இயற்றினோம்.
இவ்வாறு உங்கள் கோரிக்கையை விரிவுபடுத்துங்கள்.
அதுவும் நன்மை பயக்கும் என்று கேட்டுக் கொண்டோம்.
அடுத்து இது முஸ்லிம்களின் போராட்டம் அல்ல.
அனைத்து சமூக மக்களும் இதற்காக குரல் கொடுக்கிறார்கள் என ஆட்சியாளர்கள் எண்ணும் வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும்.
அதற்கு முஸ்லிமல்லாத சிறைவாசிகளின் குடும்பத்தாரை சந்தித்து அவர்களின் தலைமையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
இதன் மூலம் முஸ்லிம் என்பதற்காக நடக்கும் அலட்சியங்களை சரி செய்து விட முடியும்.
அப்படி நடத்தப்படும் போராட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாஅத் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர்களிடம் விளக்கினோம்.
மேலும் தலைமையேற்பது யார்?
என்பதைப் பார்த்து விட்டு இயக்க ரீதியாக ஒன்று கூடத் தயங்கும் முஸ்லிம் அமைப்புகளை இந்த பொதுத் தலைமையின் மூலம் எளிதாக ஒன்றிணைக்கும் நன்மையும் இதன் மூலம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அந்தப் பேச்சுவார்த்தையில் நாம் தெரிவித்தோம்
நன்றி. உணர்வு வார இதழ்

Related Posts: