தனி நபர் பிளாஸ்டிக் பயன்பாட்டை இன்னும் 6 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தகவலை தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் தனிநபர் சராசரி பிளாஸ்டிக் பயன்பாடு 10 கிலோவாக இருப்பதாகவும் 2022ம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட வேண்டுமென்றால் பெட்ரோகெமிக்கல் துறையில் அதகளவில் முதலீடுகள் தேவைப்படுவதாகவும் இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்