வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்-

செய்தி: மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து. மக்கள் குரல் :இதை நீங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காதுகளில் விழும்படி சத்தமாக சொல்லுங்கள். நீதிபதி கிருபாகரன் மதுவுக்கு எதிராக அருமையான 16 கேள்விகளை கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இடையில் புகுந்து நீதிபதி சத்யநாரயணா அமர்வு குட்டையை குழப்பி இது அரசின் கொள்கை முடிவு என சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் நாங்கள் தலையிடமாட்டோம் என்று சொல்லிவிட்டார். நாங்கள் நீதிபதியிடம் கேட்கிறோம் இந்தியாவில் அதிகமான இளம் விதவைகள் தமிழ் நாட்டில் இந்த மதுவால்,அதிகமான சாலை விபத்து ஏற்படுவது இந்த மதுவால், போதை யால் கற்பழிப்பு அதிகம் இந்த மதுவால், பள்ளி மாணவர்கள் கூட குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது இந்த மதுவால், தினமும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படுவது இந்த மதுவால், உங்கள் சட்டம் என்ன பெண்களை அடித்து துன்புறுத்துவதை ஆதரிக்கிறதா? எல்லாவற்றுக்கும் மேலாக நீதித்துறையில் ஏற்கனவே கோடிக்கணக்கில் வழக்குகள் தேக்கம்,நீதிபதிகள் பற்றாக்குறை என இருக்கும் சூழ்நிலையில் இந்த மதுவால் தினமும் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன. இது நீதித்துறையின் செயல்பாட்டையே ஸ்தம்பிக்க செய்து விடுகிறது. நீதிபதிகளின் வேலைப்பளு அதிகமாகிறது.சமீபத்தில் கூட சென்னையில் ஒரு பெண் நீதிபதி வேலை பளு காரணமாக மயக்கமுற்று விழுந்தார் .எனவே நீதியரசர் அவர்களே டெல்லி,மும்பை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மதுவுக்கு எதிராக பிறப்பித்த கடுமையான உத்தரவை நீங்களும் பிறப்பிக்க வேண்டுகிறோம்.வருமானம் வருகிறதே என்பதற்காக அரசு ஒரு தவறான வியாபாரம் செய்து மக்கள் பாதிக்கப்படும் போது அதை தடுக்கும் பொறுப்பும் அதிகாரமும் உயர்நீதிமன்றத்துக்குதான் உள்ளது. அரசோ நீதிமன்றமோ மக்களின் வாழ்வை பாதுகாக்கத்தான் இயங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஓம் நமசிவாயா அனைவருக்கும் நல்ல புத்தியை கொடுங்கள்
FB: Thangam Pandiyan