வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஸ்வீடன் பாலியல் தொழிலை எப்படிக்கட்டுப்படுத்தியது?

 அங்கே பாலின்பத்தை விலை கொடுத்து வாங்குவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. அதே சமயம் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்குப் பதில் அவர்களை பாதிக்கப்படவர்களாக கருதி மறுவாழ்வு அளிக்கப்பட்டது. விளைவாக இன்று ஸ்வீடனில் பெருமளவு பாலியல் தொழிலும் அதற்காக பெண்களை கடத்துவதும் ஒழிக்கப்பட்டு விட்டது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்த பயனும் அடையப்போவதில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து இந்த தொழிலுக்குள் பெண்கள், சிறுமிகள் வலுக்கட்டாயமாக கொண்டுவரப்படுவதும் தடுக்கப்பட போவதில்லை.
பெண்களை போகப்பொருளாக விலைகொடுத்து வாங்குபவர்களை தண்டித்தாலே பாலியல் தொழில் பெருமளவு கட்டுக்கு வந்துவிடும் என்ற ஸ்வீடன் உதாரணத்தை இந்தியா போன்ற நாடுகள் தீவிரமாக யோசிக்கவேண்டும்

Related Posts: