ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஒரு தேச துரோகி.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பல சுதந்திர வீரர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. இதில் ஒரு நபர் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு பிச்சை கேட்டு பல கருணை மனுக்களை எழுதினார். 24 நவம்பர் 1913 அன்று அவர் எழுதிய இரண்டாவது மனுவில் கூறியது இவை, "என் தாய் அரசாங்கத்திற்கு திரும்பிச் செல்ல ஆசைபடுகிறேன். என்னை விடுதலை செய்தால், நான் மற்றும் என்னை பின்பற்றி வரும் அனைத்து இளைய சுதந்திர வீரர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை பணிபுரிய வைப்பேன்".
இப்படிப்பட்ட ஒருநபரின் முகத்தைகூட பார்க்க நாம் வெட்கப்படுவோம். அந்த நபரின் பெயர் வீர் சாவர்க்கர்.
வீர் சாவர்க்கர் ஒரு தேச துரோகி. ஆனால் அரைடிரவுஸர் அணிந்து, தேசபக்தர்கள் போர்வையில் திரியும் ஜாதி மத வெறியர்களை (ஆர்.எஸ்.எஸ்/பி.ஜெ.பி) பொறுத்த வரை இவர் ஒரு குரு மற்றும் வழிகாட்டி.
வெட்கக்கேடு!!!!

அரசியல் நையாண்டி Political Satire's photo.