புதன், 3 பிப்ரவரி, 2016

முதல் மின்சார ஒளி விளக்கு ஒளிர்ந்த


1879-ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியலரான ஜோசப் வில்சன் ஸ்வான் என்ற கண்டுபிடிப்பாளர், டைனே எனும் இடத்தில் உள்ள சமுதாய அரங்கில் 700 பேர் முன்னிலையில் மின்சாரத்தின் மூலமாக வெற்றிடத்தில் ஒளிரும் மின் குமிழ் விளக்கினை இயக்கி காண்பித்தார். நியூகேஸ்ட்டில் நகரத்தின் மையத்தில் உள்ள ஓர் தெருவில் முதல் மின் விளக்கு பொருத்தப்பட்டது. 1881-ஆம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்திருந்த சேவாய் எனும் திரையரங்கில் மின் விளக்கினை ஒளிரச்செய்தார். ஆனால் இவர் காப்புரிமை பெறுவதற்கு முன்பே எடிசன் காப்புரிமை பெற்றுவிட்டார். 1904-ஆம் ஆண்டு ஜோசப் வில்சன் ஸ்வானிற்கு இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்டு, சர் பட்டம் வழங்கினார்
Puradsifm's photo.